ஸிட்சிபாஸ், நிஷிகோரி- ஸ்வெரவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம் !

03.06.2021 10:12:26

 

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ், ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸிட்சிபாஸ், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் ரஷ்யாவின் கரேன் கச்சனோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஜப்பானின் கெய் நிஷிகோரி 4-6, 6-2, 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.


மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸண்டர் ஸ்வெரவ் மற்றும் ரஷ்யாவின் ரோமன் சப்யூலினும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸண்டர் ஸ்வெரவ் 7-6, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.