பிரித்தானியாவில் பிரேஸிலில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொவிட்-19 மாறுபாட்டின் ஆறு தொற்றுகள் கண்டுபிடிப்பு !

01.03.2021 10:27:13

பிரேஸிலில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாட்டின் ஆறு தொற்றுகள் தற்போது பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மூன்று தொற்றுகள் மற்றும் தனித்தனியாக ஸ்கொட்லாந்தில் மூன்று தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டு தொற்றுகள் தெற்கு க்ளோசெஸ்டர்ஷையரில் உள்ள ஒரு வீட்டைச் சேர்ந்தவை எனவும் அவர்கள் பிரேசிலுக்கு பயணம் செய்த பதிவுகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில், புதிய மாறுபாட்டிற்கு நேர்மறையானதை பரிசோதித்தவர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் இன்னும் முயற்சிக்கின்றனர்.

மூன்று ஸ்கொட்டிஷ் குடியிருப்பாளர்கள் பிரேசிலிலிருந்து பரிஸ் மற்றும் லண்டன் வழியாக வடகிழக்கு ஸ்கொட்லாந்திற்கு சென்றதாக ஸ்கொட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘பி 1’ என அழைக்கப்படும் இந்த மாறுபாடு பிரித்தானியாவில் அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறை.

(பி 1) மாறுபாடு ஜனவரி மாதம் வடக்கு பிரேஸிலில் உள்ள மனாஸிலிருந்து ஜப்பானுக்கு பயணித்தவர்களில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இதற்கு எதிராக பயனுள்ளதாக இருக்காது என்ற கவலையும் உள்ளன.