இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது

06.06.2021 10:10:23

 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,694,879 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,795,549 ஆக காணப்படுவதுடன் 1,555,248 பேர்  தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 3,44,082 பேர் உயிரிழந்துள்ளனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.