பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் : ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம் !

24.04.2021 11:19:19

பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், பிரித்தானியாவின் கேமரூன் நோரியை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை எவ்வித நெருக்கடியும் இல்லாமல் நடால் 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய நடால், செட்டை 6-4 என் போராடிக் கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், நடால், சகநாட்டு வீரரான பப்லோ கேரியோ புஸ்டாவுடன் மோதவுள்ளார்.