வீதியில் இறங்கி கமலுக்காக குத்தாட்டம் போட்ட அக்‌ஷரா ஹாசன்... வைரலாகும் வீடியோ

04.04.2021 11:10:33

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமலுக்காக அவரது மகள் அக்‌ஷரா ஹாசன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்து இருக்கிறார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முதன்முதலாக வேட்பாளராக போட்டியிடுகிறார். கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் அவரது அண்ணன் மகள் சுகாசினி கடந்த சில நாட்களாக கோவையின் ஒவ்வொரு தெருவிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனும் கோவையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். அக்சராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்குகளை திரட்டிய வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள்.