கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு 286 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

06.06.2021 09:55:35

 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்றிட்டத்திற்கு இதுவரை 286 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் செலவிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, ‘அரசாங்கம் தடுப்பூசிக்காகவே பாரிய தொகையினை செலவிட்டுள்ளது.

மேலும் நிவாரணப் கொடுப்பனவும் உரியவாறு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு காலத்தில் 15 பில்லியன் ரூபாயும் இடர்கால கொடுப்பனவுக்காக 80 பில்லியன் ரூபாயும் தற்போது  35 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்துக்கு எதிர்வரும் நாட்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.