தாதா சாகேப் பால்கே விருது உருவானது எப்படி ?

01.04.2021 11:31:54

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரிலேயே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் மத்திய அரசு இந்த விருதை வழங்கி வருகிறது.

1913-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முழு நீள திரைப்படமான ‘ராஜா அரிச்சந்திரா’வை தாதா சாகேப் இயக்கினார். அதற்கு முன்பு வரையில் திரைப்படங்கள் ஊமைப்படங்களாகவே வண்ணம் இல்லாமலேயே இருந்து வந்தது. 

அதை மாற்றிக் காட்டி தனது ராஜா அரிச்சந்திரா திரைப்படம் மூலம் மாற்றத்தை தொடங்கியவர் தாதா சாகேப் என்பதால் அவரது பெயரிலேயே சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு இவ்விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.