மிட்செல் மார்ஷின் சிறப்பான பங்களிப்பால் பெர்த் அணி அபார வெற்றி!

07.01.2021 08:59:39

 

பிக் பேஷ் ரி-20 தொடரின் 30ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 86 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் கொலின் முன்ரோ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி அணியின் பந்துவீச்சில், லோய்ட் போப் மற்றும் ஸ்டீவ் ஓகீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 184 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 86 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவுசெய்தது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெக் எட்வட்ஸ் 44 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஓகீப் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி அணியின் பந்துவீச்சில், ஹென்ரிவ் டை 4 விக்கெட்டுகளையும் ஜெய் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ், ஜேஸன் பெரேன்டொர்ப் மற்றும் பாவட் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் 1 விக்கெட்டினையும் சாய்த்த சிட்னி அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.