தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தார் பேராயர்?

07.04.2021 09:47:06

இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது .ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. கொழும்பு பேராயர், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.