இனவாத செயற்பாடுகளை தடுப்பதில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது – பிரதமர்

எந்தவொரு மதத்திற்கும் இனத்திற்கும் அவமரியாதை செய்யக்கூடிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதில் ஊடகங்களுக்கு பாரிய பங்கு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பதுளையில் மக்களுக்கு ஆற்றிய விசேட...

மாவீரர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும்!

இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் தீர்வு எனவும், போரில் உயிர்நீத்த எங்களுடைய உறவுகளையும் மாவீரர்களையும், நினைவு கூருவதற்கும் எந்தவித தடைகளும் இன்றி அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகக் கருத்தறியும் குழுவிடம்...

தேசிய கொடியிலுள்ள சிங்கத்தை நீக்கவும்- உத்தேச அரசியலமைப்புக்கு யோசனை

தேசிய கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றிவிட்டு சகல மக்களிடையேயும் சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் சின்னமொன்றை தேசியக் கொடியில் சேர்க்குமாறு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை மன்னார் மாவட்ட மகளிர் சங்கமொன்று முன்வைத்துள்ளது. உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்த யோசனை...

உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் 7 பேரின் உறுப்புரிமை உடன் ரத்து-ஸ்ரீ.ல.சு.க. தீர்மானம்

கட்சியையும், தலைமையையும் விமர்சித்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்தவகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள்...

உள்ளக விசாரணை நம்பகமானதாக இருந்தால் ஏற்கத் தயார்! – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை அரசாங்கத்தின் விசாரணைப் பொறிமுறை சுயாதீனமானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்குமிடத்து அதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளளார். இலங்கைக்கான விஜயத்தினையடுத்து, ரொயிட்டர்ஸ்...

மஹிந்தாவின் புதிய பயணம் ஆரம்பம் ; காரியாலயம் திறந்து வைப்பு

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகார மற்றும் மக்கள் தொடர்புக் காரியாலயம் இன்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான இணையத்தளம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று நடக்கவுள்ள நிகழ்வில் இந்த இணையத்தளத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்...

பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்பது அவசியம்-பப்லோ டி கிறீவ்

பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் தேசிய மட்டத்திலான கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியமானது என ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே...

27, 28, 29ஆம் திகதிகளில் யாழில் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வு!

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான...

ஆயுதமேந்தி போராடியவர்கள் அதற்கு நிகரான தீர்வையே எதிர்பார்ப்பார்கள்: முன்னாள் எம். பி சந்திரகுமார்

வடக்கு, கிழக்கு மக்கள் ஒரு தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி போராடியவர்கள். அதற்காக பலதியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு தீர்வு என்று சொல்லும்போது அதற்கு நிகரான தீர்வைத்தான்அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். என முன்னாள் பாராளுமன்ற...

எம்மவர் படைப்புக்கள்