9 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நகுல் – சுனைனா

நகுல் – சுனைனா இருவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள், புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

`எரியும் கண்ணாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சச்சின் தேவ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முருகானந்தம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரியாஸ் முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

நகுல் நடிப்பில் அடுத்ததாக `செய்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.