9ஆம் திகதி 9 கட்சி தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் 9 கூட்டணி கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் வைத்து சந்திக்க ஜனாதிபதி முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இதில் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடத்தில் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் முதல் கூட்டமாக இது அமையவுள்ளது.

LEAVE A REPLY