80 சதவீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறை தொடர்பில் தெளிவில்லை!

புதிய தேர்­தல் முறை தொடர்­பாக 80 வீத­மான வாக்­கா­ளர்­கள் சரி­யான விளக்கமின்றி இருப்­ப­தாக தேர்­தல் கண்­கா­ணிப்பு அமைப் பான பவ்­ரல் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டுள்ள பவ்­ரல் அமைப்­பின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் றோகண ஹெற்­றி­யா­ராச்சி, புதிய தேர்­தல் முறை தொடர்­பாக நாடு முழு­வ­தும், விளக்­க­ம­ளிக்­கும் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.
சில வேட்­பா­ளர்­கள் கூட, புதிய தேர்­தல் முறை பற்­றிய விளக்­க­மின்றி இருக்­கின்­ற­னர்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் சட்­டத்­தி­ருத்­தம் மற்­றும் மீள்­தி­ருத்­தம் என்­பன, வாக்­கா­ளர்­களை அதி­க­ள­வில் குழப்­பி­யுள்­ளது. தேர்­தல் மறு­சீ­ர­மைப்­பு­கள் தொடர்­பாக பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக அர­சி­யல் கட்­சி­கள் கவ­னம் செலுத்­த­வில்லை -என்­றார்.

LEAVE A REPLY