8 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.

இதுவரை, இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் இந்த 7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அப்போதுதான் அவர்களால் சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெறமுடியும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1993ல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில், மத்திய சட்ட அமைச்சகத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 கணக்கெடுப்பின்படி எட்டு மாநிலங்களில் இந்துக்கள் மக்கள் தொகை வருமாறு:-

லட்சதீவு (2.5%), மிசோரம் (2.75%), நாகலாந்து (8.75%), மேகாலயா (11.53%), ஜம்மு காஷ்மீர் (28.44%), அருணாச்சல பிரதேசம் (29%), மணிப்பூர் (31.39%) மற்றும் பஞ்சாப் (38.40%),

மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லீம் மக்கள் தொகை கணிசமாக உள்ள மாநிலம் லட்சத்தீவு( 96.20%) ஜம்மு காஷ்மீர் ( 68.30 %)

மேற்கு வங்கம் (27.5%), கேரளா (26.60%), உத்திரப்பிரதேசம் (19.30%) மற்றும் பீகார் (18%) ஆகிய மாநிலங்களீல் முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன.

LEAVE A REPLY