65 ஆண்டுகளில் முதல் முறையாக சீனா-தாய்வான் தலைவர்கள் சந்திப்பு

151107080732_cn_xi_ma_meeting_xi_speech_512x288_epa_nocreditசீனாவில் 1949ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு முதல் முறையாக சீனா மற்றும் தாய்வான் நாட்டுத் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.


அந்த உள்நாட்டுப் போரின் முடிவில் நாடு பிளவுபட்டு தாய்வான் எனும் தனி நாடு உதயமானது.
சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங், தாய்வான் அதிபர் மா யிங்-ஜியோ அவர்களுடன் கைகுலுக்கினார்.
இருதரப்பும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என சீன அதிபர் ஷியும், இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையை மதித்து நடக்க வேண்டும் என தாய்வான் அதிபார் மாவும் தெரிவித்தனர்.
தாய்வானில் பல்கட்சி ஜனநாயகம் நிலவும் அதேவேளை சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நிலவுகிறது.
தாய்வான் நிலப்பரப்பு தமது பெருநிலப்பரப்பு என சீனா கருதுகிறது.
ஆனால் முழுச் சீனா மீதும் நியாயமான அதிகாரம் கொண்டவர்களாகத் தாய்வான் அரசு தம்மைப் பார்க்கிறது.

LEAVE A REPLY