600 பொலிஸாரைக் கொன்றதாக புலிகள் மீது ஐ.நா. சபையில் முறைப்பாடு- கருணா சாட்சியமளிப்பதாகக் கூறும் விமல

இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று, விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளார்களென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் விமல என்பவரே புலிகள் மீது இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் புலிகள் போர்க்குற்றம் புரிந்ததாக முறைப்பாடு தெரிவிக்கவில்லை. எனவேதான் இந்த முறைப்பாட்டினை தான் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 600 பொலிஸார் சுட்டுக்கொன்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் ஜெனட் விமல கூறியுள்ளார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் (கருணா) சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.