50வது நாளை தொட்ட பிக் பாஸ் 4

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இன்று 50வது நாளை தொட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவு என தொடர்ந்து பிரச்சனையோடு தொடர்ந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் ஷோ இன்று 50வது நாளை தொட்டு இருக்கிறது.
இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் இது பற்றி பேசி இருக்கிறார். 50வது நாளை தொட்டு இருப்பதால் இந்த வீட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன என சொல்லுங்கள் என கமல் கேட்டார். அதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து நின்று இது பற்றி பேசினர்.

முதல் ஆளாக பாலாஜி முருகதாஸ் வந்து பேச தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படும் என கமல் கூறிய நிலையில் பாலாஜி மணிக்கூண்டு டாஸ்கில் எண்ணியது போல கமல் வேகமாக நொடிகளை எண்ணி அவரை கிண்டல் செய்தார்.