5 புதிய ஆளுனர்கள் – வடக்கிற்கு இன்னமும் இல்லை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாகாணங்களுக்கு நேற்று மாலை புதிய ஆளுனர்களை நியமித்துள்ளார். மேல் மாகாண ஆளுனராக அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மைத்ரி குணரத்ன, மத்திய மாகாண ஆளுனராகவும், சரத் எக்கநாயக்க, வட மத்திய மாகாண ஆளுனராகவும், பேசல ஜெயரத்ன, வடமேல் மாகாண ஆளுனராகவும் நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

வடக்கு, சப்ரகமுவ, ஊவா, மற்றும் தென் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

சிறிலங்கா அதிபரின் உத்தரவின் பேரில், அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் கடந்த 31ஆம் நாள் பதவி விலகினர்.

எனினும், முன்னர் ஆளுனர்களாகப் பணியாற்றிய எவருக்கும் இதுவரை மீள் நியமனம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.