32 கிலோ எடை கொண்ட உடை அணிந்து நடித்த கரீனா கபூர் கான்

kareenakapoor-movieஇந்தி பட நடிகை கரீனா கபூர் கி மற்றும் கா என்ற படத்தில் 32 கிலோ கிராம் எடை கொண்ட லெஹெங்கா வகை உடையை அணிந்து நடித்துள்ளார்.

கரீனாவின் ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா இதற்காக எம்ப்ராய்டரி வேலைகள் மற்றும் வலை போன்ற அமைப்பு உடைய பல்வேறு லேயர்கள் கொண்ட வடிவங்களை உருவாக்கியுள்ளார்.

இந்த உடையை அணிந்து கொண்டு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்த பாடல் காட்சியின் படப்பதிவில் 2 நாட்களாக நடித்துள்ளார் கரீனா. இந்த பாடலுக்கான நடனத்தை போஸ்கோ அமைத்துள்ளார். இந்த படம் முழுவதும் கரீனா கபூர் மேற்கத்திய தோற்றத்தில் வருகிறார்.

தனது ரசிகர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக கி மற்றும் கா படத்தில் இடம்பெறும் பாடலில் முழுவதும் இந்திய பெண் தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது லெஹெங்கா 32 கிலோ கிராம் எடை கொண்டுள்ளது. இந்த படத்தில் தொழில் அதிபர்ராக கரீனா கபூர் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக முதன்முறையாக அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இந்த படத்தில் கேசுவல், சூட் மற்றும் பிற உடைகளை அணிந்தும் கரீனா நடித்துள்ளார்.

LEAVE A REPLY