3 பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் – இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தளுக்கான திகதி அறிவிக்கப்பட்டமையில் இருந்து தற்போதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என கஃபே அமைப்பின் இயக்குனர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அந்த அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து இன்றுவரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த தினமான நேற்று மட்டும் 96 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அதற்கு முன்னைய நாட்களில் 7 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் காணப்படுகின்றன. குறிப்பாக பிரதான 3 வேட்பாளர்களின் சுவரொட்டடிகள் ஏராளமாக காணப்படுகின்றன.

அத்துடன் பல பகுதிகளில் ஏராளமான பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது, அதில் வேட்பாளர்களை வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.