27 பேர் கொண்ட குழுவுடன் சீனாவுக்கு கிளம்பினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பீஜிங்கில் நடைபெறும், ஆசிய நாகரீகங்கள் கலந்துரையாடல் என்று கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கே சிறிலங்கா அதிபர் சீனா சென்றுள்ளார்.

அவருடன் 27 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங், சீன பிரதமர் லி கெகியாங் உள்ளிட்டோருடன் தனித் தனியான பேச்சுக்களை சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ளார்.