22 மாவட்டங்களில் போட்டியிட UNP தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 22 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.