21 மற்றும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் ஆத்திரமடைந்த மனோ

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட 21 மற்றும் 22 வது அரசியலமைப்பு திருத்தங்கள் கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகிய துறைகளில் அடைந்த வெற்றிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாகும் என மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சிறுபான்மையினர் அல்லாத பிரதான அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அகற்ற முற்படும் இந்த முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களை பொதுமக்கள் முன்வந்து தோற்கடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த திருத்தங்கள் மூலம் விஜயதாச ராஜபக்ஷ ஜனநாயகம். சுதந்திரம் மற்றும் அடிப்படையில் சமீப காலங்களில் பொதுமக்கள் அடைந்த வெற்றிகளை சேதப்படுத்த முயற்சிக்கிறார் என மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

எனவே கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைந்து நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இதுபோன்ற திட்டங்களை நிராகரித்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.