2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிக பாரம்பரியமான விளையாட்டு தொடர்களில் முதன்மையிடம் வகிக்கும் ஒலிம்பிக் போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைக்கால போட்டிகள் மற்றும் குளிர்கால போட்டிகள் என இரண்டு முறை நடைபெறுகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெருகின்றன.

வரும் 2020-ம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதேபோல், 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து பாரீஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்களுக்கிடையே போட்டி நிலவியது.

இந்நிலையில், 2024 போட்டிகள் பாரீஸ் நகரிலும், 2028-ம் ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY