2015ம் ஆண்டுக்கான ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு

i3.phpசர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையிலேயே, இவ்வணிகள் தெரிவாகியுள்ளன.

டெஸ்ட் அணியில் இலங்கையர்கள் எவரும் இடம்பெறாத அதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ண டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணியின் விபரம்

டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், யுனிஸ் கான், ஸ்டீவன் ஸ்மித், ஜோ றூட், சப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்), ஸ்டுவேர்ட் ப்ரோட், ட்ரென்ட் போல்ட்ற், யாசீர் ஷா, ஜொஷ் ஹேஸல்வூட். 12ஆவது வீரர் – இரவிச்சந்திரன் அஷ்வின்.

ஒருநாள் போட்டியின் விபரம்

திலகரட்ண டில்ஷான், ஹஷிம் அம்லா, குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்), ஏ.பி டி வில்லியர்ஸ், ஸ்டீவன் ஸ்மித், றொஸ் டெய்லர், ட்ரென்ட் போல்ட்ற், மொஹமட் ஷமி, மிற்சல் ஸ்டார்க், முஸ்தபிஸ{ர் ரஹ்மான், இம்ரான் தாஹிர். 12ஆவது வீரர் – ஜோ றூட்

LEAVE A REPLY