20 க்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சஜித்தின் தீர்மானம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வௌியேற்றிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனநாயக ரீதியாக முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ள போதும் ஒரு குழு என்ற ரீதியில் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.