20 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு முதல்முறையாக கூடுகின்றது

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை ஆய்வு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு இன்று கூடுகின்றது.

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழு, 20 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை ஆராய்ந்து நாளை பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்த இந்த குழுவில் அமைச்சர்கள், ஜி.எல். பீரிஸ், உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த மற்றும் எவியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிலன் பெரேரா, பிரேம்நாத் சி. தொலவத்த ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.