20ஆம் திருத்தத்தை தோற்கடிப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது- லால்காந்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆம் திருத்த சட்ட மூலத்தை தோற்கடிக்க மக்களினால் மாத்திரமே முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக லால்காந் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை, நீதித்துறை செயல்முறை ஊடாக ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

அதனை, மக்களின் சக்தியால் மாத்திரமே செய்ய முடியும். மேலும், நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பின் கட்டுரைகளுக்கு மட்டுமே பொருத்தமான அளவுகோல்களை சுட்டிக்காட்டுகிறது.

ஜே.வி.பி நாட்டில் எழும் ஒவ்வொரு பிரச்சினையிலும் மக்களுடனே இருக்கும். நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

20ஆவது திருத்தம் ஏற்படுத்தும் சேதத்தை பெரும்பான்மையின மக்களை புரிந்துகொள்ளச் செய்ய முடிந்தால், வெற்றிகரமாக தோற்கடிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.