2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணிக்கு சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். தமிழகம் வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

LEAVE A REPLY