19 ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்

19 ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என்று தொழில் அமைச்சர் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊவா பரணகம தேர்தல் தொகுதியில் நேற்று (22) காலை இடம்பெறற்ற பொது மக்கள் சந்திப்பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, மகா சங்கத்தினரது கருத்துக்கள், யோசனைகளை ஏற்று, 19ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பை சீர்த்திருத்துவதற்காகவே மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அளித்தனர். நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள விடயங்கள் இல்லாமல் செய்வதற்காகவே அதில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தொழில் அமைச்சர் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்..