14000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகல் கிரிபாவ வராவெவயில் இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 14,022 குடும்பங்களுக்காக வீடுகளைகளை நிர்மாணிகும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு, விஞ்ஞாபனத்திற்கமைவாக சகல குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 8,400 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்படவுள்ளதுடன், 60 தினங்களில் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.