12 வருடங்கள்.. 47 படங்கள்… ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா

அனுஷ்கா சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகின்றன. தெலுங்கு, தமிழில் 47 படங்கள் நடித்து இருக்கிறார். தெலுங்கு சரளமாக பேசுவார். தமிழ் ஓரளவு பேசுவார். என்றாலும், இதுவரை அவர் நடித்த எந்த படத்துக்கும் சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசியது இல்லை. இதுபற்றி அனுஷ்காவிடம் கேட்டபோது….

“நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரங்களுக்கு எனது சொந்த குரலில் ‘டப்பிங்’ பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எனது தோற்றத்தை ஒப்பிடும் போது, நான் பேசுவது சின்ன பெண்பேசுவது போல இருக்கும். என் வீட்டில் இருப்பவர்கள் கூட என்னை குழந்தைபோல் பேசுகிறேன் என்று கிண்டல் செய்வார்கள்.

நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்கு குழந்தை தனமாக பேசினால் காமெடியாக இருக்கும். எனது பாத்திரங்களுக்கு அது சரிப்பட்டு வராது. எனவே தான், எனக்கு சொந்த குரலில் பேச வேண்டும் என்று ஆசை இருந்தாலும், டப்பிங் பேச வேண்டும் என்று இதுவரை டைரக்டர்களிடம் கேட்டது இல்லை” என்றார்.

LEAVE A REPLY