1-13 வரை கட்டாயக் கல்வி: அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

13 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயக் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியவில் நடந்த நிகழ்வொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பின்னடைவு காரணமாக, இத்தகைய முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.