ஹிஸ்புல்லாவை விசாரிக்க தெரிவுக்குழு முடிவு!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, விசாரணைக்கு அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.நாளைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரும் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.