ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்காக செய்யாதவற்றை நாம் செய்வோம்

ரவூப் ஹக்கீமினால் தனக்காக வாக்களித்தவர்களின் உயிரை கூட பாதுகாக்க முடியாது போனதாக பாராளுமன்று உறுப்பினர் நலிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரிந்த அளவில் ரவூப் ஹக்கீம் எந்த அரசாங்கம் வந்தாலும் அதில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படி இருந்தும் அவர் இதுவரையில் முஸ்லிம் மக்களுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை எனவும் குறைந்த பட்சம் தனக்காக வாக்களித்தவர்களின் உயிரை கூட அவரால் பாதுகாக்க முடியாது போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹக்கீமினால் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு செய்ய முடியாமல் போனவற்றை மக்கள் சக்தியின் ஊடாக தங்கள் செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.