ஸ்ருதி ஹாசனின் புதிய காதலர்

sruthihaasanதமிழில் சூர்யாவுடன் சிங்கம் 3, கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு, தெலுங்கில் பிரேமம் மற்றும் பவன் கல்யாண் இயக்கி நடிக்கும் கட்டமராயுடு ஆகிய படங்களில் பிசியாக நடித்துவருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் இவர் ஹிந்தி நடிகரான ரன்பீர் கபூருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் மும்பையின் புறநகர் பகுதி ஒன்றில் டேட்டிங்கில் ஈடுபட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன் ஒரு பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றிற்கான விளம்பர படத்தில் நடிக்கும் போது இருவர்களும் நெருக்கமானார்கள் என்று தெரிவித்தனர்.

இதனிடையே நடிகையின் தந்தையுடன் இருக்கும் நடிகை கௌதமி, இதுகுறித்து ஸ்ருதியிடம் விளக்கம் கேட்டபோது தான் இவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன என்றும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இது குறித்து ஸ்ருதிஹாசனின் நெருக்கமானவர்களிடம் விசாரிக்கும் போது, இதில் உண்மையில்லை. அவர் தந்தையின் உடல் நலத்தின் மீது தான் அக்கறை காட்டி வருகிறார். சபாஷ் நாயுடு படம் முடியாததால் அவர் இரண்டு படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் அவருக்கு சில கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் படப்பிடிப்பில் பங்குபற்றி நடிக்கவே நேரம் போதாதிருக்கும் போது ரன்பீருடன் டேட்டிங் என்று செய்தி வெளியாவதில் உண்மையில்லை. இதெல்லாம் மும்பை திரையுலகின் வணிக தந்திரங்களுள் ஒன்று என்று அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

LEAVE A REPLY