ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இரவு 07.00 மணிக்கு கூட்டம் இடம்பெற உள்ளது.

இதன்போது, வரவு செலுவத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதுடன், கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் இறுதி தீர்மானமும் எட்டப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கூறினார்.