ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

01. பதுளை மாவட்டம் – நிமல் சிறிபால டி சில்வா
02. கண்டி மாவட்டம் – எஸ்.பி.திசாநாயக்க
03. ஹம்பாந்தோட்டை மாவட்டம் – மஹிந்த அமரவீர
04. களுத்துறை மாவட்டம் – மஹிந்த சமரசிங்க
05. குருணாகல் மாவட்டம் – தயாசிறி ஜயசேகர
06. அநுராதபுரம் மாவட்டம் – துமிந்த திசாநாயக்க
07. கேகாலை மாவட்டம் – ரஞ்சித் சியம்பலாப்பிடிய
08. கம்பஹா மாவட்டம் – லசந்த அழகியவன்ன
09. மாத்தளை மாவட்டம் – சட்டத்தரணி லக்ஷமன் வசந்த பெரேரா
10. கொழும்பு மாவட்டம் – திலங்க சுமதிபால
11. காலி மாவட்டம் – ஷான் விஜயலால் டி சில்வா
12. மாத்தறை மாவட்டம் – டி.விஜய தஹநாயக்க
13. அம்பாறை மாவட்டம் – திருமதி.ஸ்ரீயானி விஜேயவிக்ரம
14. மட்டக்களப்பு மாவட்டம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
மட்டக்களப்பு தமிழ் பிரதிநிதி – குணரத்னம் ஹரிதரன்
15. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்கள் – அங்கஜன் ராமநாதன்
16. வன்னி மாவட்டம்
(மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா) – கே.காதர் மஸ்தான்
17. நுவரெலியா மாவட்டம் – டபிள்யு.ஜீ.ரணசிங்க
18. இரத்தினபுரி மாவட்டம் – அதுலகுமார ராஹூபத்த
19. திருகோணமலை மாவட்டம் – திருமதி.டபிள்யு.ஜீ.எம்.எம்.ஆரியவதி கலப்பத்தி

கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.