ஸ்பெயினின் பதில் தொழில்துறை அமைச்சர் பதவி இராஜினாமா

89234502_889021552-100x90ஸ்பெயினின் தற்காலிக பதில் தொழில்துறை அமைச்சராக கடமையாற்றி வந்த ஜோஸ் மானுவெல் சோரியா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்துள்ளதாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியான பட்டியலில் பதில் தொழில்துறை அமைச்சரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக சோரியா அறிவித்துள்ளார்.

ஆனால் தான் எவ்வித குற்றச்சாட்டுகளையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்த அவர், தனது அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயினில் முறையான அரசாங்கமொன்று இல்லாத நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த நிலையிலேயே இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

LEAVE A REPLY