ஷிவானியை கலாய்த்த ரம்யா! பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் ஷிவானி பாலாஜியை மட்டும் entertain செய்வதை வேலையாக வைத்திருக்கிறார் என ரம்யா பாண்டியன் கலாய்த்து உள்ளார்.

இன்றைய பிக் பாஸ் ஷாவின் இரண்டாவது ப்ரொமோ வீடியோ தற்போது வெளிவந்து இருக்கிறது. போட்டியாளர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் வழங்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க் முடிவுபெற்று அதன் வெற்றியாளர்களை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் ரம்யா, ஆஜித் உள்ளிட்டவர்கள் அமர்ந்து ஷிவானி பற்றி மிகவும் கிண்டலாக பேசி இருப்பது காட்டப்பட்டு இருக்கிறது.

யார் என நினைக்கிறீர்கள், இந்த வாரம் யார் less involvement? என ஆஜித் கேட்க. உன் மனதில் இருக்கும் ரெண்டு பேர் யாரு என ரம்யா பாண்டியன் இன்னொரு கேள்வியை கேட்கிறார். அதற்கு ஆஜித் ஷிவானி மற்றும் சுசித்ரா என தெரிவித்தார்.

ஷிவானி என்ன பண்ணா? என சம்யுக்தா சொல்ல, ‘அவ எதுவும் பன்னல என்பதால் தான் சொல்கிறார்’ என ரம்யா தெரிவித்து உள்ளார்.

‘ஷிவானி பாலாவை என்டர்டெயின் பண்ற ஒரே வேலையை மட்டும் தான் பண்றா.. பாலா மாமா, பாலா மாமா என சுத்துறீங்க, வீட்ல என்ன சுவாரஸ்யம் கொடுத்தீங்கனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்’ என ரம்யா மேலும் பேசி ஷிவானியை கலாய்த்து உள்ளார்.