வேலையை ஆரம்பித்த கமல்..

தீபாவளி சிறப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் பெர்ஃபார்ம்களை கண்டு ரசித்த கமல், போட்டியாளர்கள் அவர் நடித்த படங்களில் இருந்து வசனங்களை பேச கோரிக்கை வைக்க, கமல் டக்கு டக்குன்னு எல்லாத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு பேசி அசத்தியதை அப்படி பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஸ்தம்பித்து போயிருப்பார்கள்.

கொண்டாட்டங்கள் முடிந்து விட்ட நிலையில், பிக் பாஸுக்கு வந்த வறுத்தெடுக்கும் வேலையை ஆரம்பித்து, நிகழ்ச்சியை மீண்டும் சூடு பிடிக்க வேண்டும் என இன்றைய முதல் புரமோவில் கமல் சாட்டையை சுழற்றும் காட்சிகளை பார்க்கும் போதே தெரிகிறது. வச்சு செய்யுங்க ஆண்டவரே, ஒரு வாரமா வெறுப்பேத்திட்டாங்க, மீண்டும் மிரட்டல் பிக் பாஸ் கம்பேக் ஆகணும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாலா தான் பலி ஆடு பிக் பாஸ் மறந்து விட்டாலும், நான் மறக்க மாட்டேன் எனக் கூறிய கமல், இந்த வாரம் யார் போரிங் போட்டியாளர் என கேட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டார். அதிலும் நம்ம ஜித்தன் ரமேஷ், முதல் ஆளாக பாலாவை எட்டிப் பார்க்க, சொல்லுங்க ரமேஷ் என கமல் கேட்க, பாலா தான் சார் என ஜித்தன் தனது ஜித்து வேலையை காட்டி கெத்து காட்டிட்டார்.