வெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சிட்னி நகரில் இன்று (புதன்கிழமை) காலை 100 மில்லிமீற்றரும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மீட்பு உதவிகள் கோரி பல அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாகவும், அதன்படி பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து சுமார் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.