வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு பிடியாணை

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.