வெளியிடங்களிலிருந்து மக்களைக் குடியமர்த்துவது இனப்பரம்பலைப் பாதிக்கும் – சத்தியலிங்கம்

வவுனியாவில் வெளியிடங்களிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துவது, இனப்பரம்பலைப் பாதிக்கும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தரணிக்குளத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “வவுனியாவில் மூவின மக்களும் வாழ்ந்து வரும் நிலையில், அங்கு ஒரு இன மக்களை மாத்திரம் பலப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சமாதானத்தின் முயற்சியை சீர்குலைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.