வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஹொட்டல்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க முடியாது!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஹொட்டல்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என என அமைச்சர் ​பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்று (2) அவரது அமைச்சில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுய கௌரவத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் அதிகரிப்பைக் காட்டும் குறித்த காலப்பகுதியில், சுற்றலாத் துறைக்கு தடையை ஏற்படுத்தும், சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் விசேட நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஹொட்டல்களை சோதனை செய்து அவர்களது வர்த்த அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY