வெளிநாட்டிலிருந்தவாறு இலங்கையில் தேர்தல் பிரசாரம் செய்தார் கோத்தா

உலகளவில் தாம் வெற்றிபெற்றதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டு உலக நாடுகளின் தாளத்துக்கு இந்த அரசு ஆடிக்கொண்டிருக்கிறது என வெநாட்டில் இருந்தவாறு இலங்கையில் நடைபெற்ற கூட்டஅமான்றில் கருத்து தெரிவித்தார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச

நல்லாட்சி அரசின் மந்தமான செயற்பாடு குறித்த அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் மக்கள் எதிர்வரும் தேர்தலைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை மக்கள் முன்னணி ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் ‘ஸ்கைப்’ மூலம் இணைந்துகொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசு நாட்டின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தாமல் தமது அரசியல் நோக்கங்களை அடைவதில் மட்டுமே கரிசனை காட்டிவருகிறது.

இந்த நிலையில்தான் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அரசின் தவறான போக்கைச் சுட்டிக் காட்டுவதற்கு மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY