வெற்றி பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார் – மனோ

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார். எனவே நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. எமக்கு பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நேரத்தை வீணடிக்க முடியாது.

நாம் பெருமையடைகிறோம். எம்மிடம் வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவர் இருக்கிறார். இவரைக் கொண்டு நிச்சயமாக நாம் இந்தத் தேர்தலில் வெற்றியடைவோம்” என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, “இங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பலமான கூட்டணியொன்றை அமைத்து, அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளோம்.

இந்த பொதுத் தேர்தலில் பலமான ஜனநாயகக் கூட்டணியொன்று உருவாகும். இந்தக் கூட்டணியின் தலைவராக நிச்சயமாக சஜித் பிரேமதாசதான் செயற்படுவார்” என மேலும் தெரிவித்தார்.