வெற்றி-தோல்வி பற்றி கார்த்திக்கு, சூர்யா சொன்ன அறிவுரை

கார்த்தி கதாநாயகனாக நடித்து, வினோத் டைரக்‌ஷனில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து வெளிவந்த படம், ‘தீரன் அதிகாரம் ஒன்று.’ இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்து இருந்தார். படத்தின் வெற்றி விழா, சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அதில் கலந்து கொண்டு கார்த்தி பேசியதாவது:-

“நான் மிகவும் சிரமப்பட்டு நடித்த படம், இது. படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். கடும் குளிரிலும், கடுமையான வெயிலிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘பருத்தி வீரன்’ படத்தில் நான் கதாநாயகனாக அறிமுகமானபோது, அண்ணன் சூர்யா என்னிடம், “நீ பாட்டுக்கு உழைத்துக் கொண்டேயிரு…அதற்கு ஒருநாள் பலன் கிடைக்கும்” என்றார்.

அதைத்தான் நான் செய்தேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்து இருக்கிறது. தோல்வி, அவமரியாதைகளை தாண்டி வரும்போதுதான் வெற்றி கிடைக்கும் என்று சொல்வார்கள். வெற்றியில், தோல்வியும் ஒரு அங்கம். வளர வேண்டுமானால் தோல்வியை சந்தித்தே ஆகவேண்டும். இரண்டு விதமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.”

இவ்வாறு கார்த்தி பேசினார். டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் சத்யா, ஆர்ட் டைரக்டர் கதிர், தடயவியல் நிபுணர் தனஞ்செயன் ஆகியோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY