வெட்கம் கெட்டத்தனமாக சம்பந்தன் பேசுகின்றார் – தினேஸ் குணவர்தன

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வெட்கம் கெட்டத்தனமாக பேசுகின்றார் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்து வெட்கம் கெட்டத்தனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் ரவி கருணாநாயக்கவை குற்றவாளியாக பார்க்க முடியாது என சம்பந்தன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிரான தினேஸ் குணவர்தன வெளியிட்ட கருத்துக்கு ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY