வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வடமாகாணத்திற்கு இன்று விஜயம்

வடக்கில் தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தேவைகளை ஆராய்வதற்காக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அம்மாகாணத்திற்கு இன்று (02) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

விஜயத்தின் போது அமைச்சர் தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களின் தொழில்துறை தேவைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

வடக்கிலுள்ள மாணவர்களை கல்வி மற்றும் ஊடகத்துறையில் ஈடுபடுத்துவது குறித்தும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.